மிசோரம் கல்குவாரி விபத்து: மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மிசோரமில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 பேருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி நிதி உதவி அறிவித்துள்ளார்.

தெற்கு மிசோரமின் ஹனாதியால் மாவட்டத்தில் மவ்தார் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. 

இதில் ஒரு தொழிலாளி தப்பி ஓடிய நிலையில், 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் இவர்களுடன்,நேற்று காலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். இருப்பினும் காணாமல் போன மற்ற 4 தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து மீதமுள்ள ஒரு தொழிலாளியை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்று கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் தெரிவித்துள்ளார். அசாம் ரைபிள் படை, மாநில போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை தேடுதல் குழுவினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும் கல்குவாரியில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மிசோரத்தில் கல் குவாரி இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 பேரின் குடும்பங்களுக்கு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee compensation announcement for the families of 5 people who died in the stone quarry accident in Mizoram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->