முடிவே இல்லையா? மத்திய அரசு அலட்சியம்! வாரம் ஒரு ரயில் விபத்து - விளாசிய மம்தா!
Mamata Banerjee said that various deaths occur due to accidents in the room every week
ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலையில் தரம் புரண்டநிலையில், ஒவ்வொரு வாரமும் ஏற்படும் அறையில் விபத்தால் பல்வேறு மரணங்கள் நிகழ்கிறது என மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பேனர் ஜி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்க்கண்டில் உள்ள ராஜ்கர் செவன் ரயில் நிலையத்திற்கு அருகில் தரம் புரண்டு உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து நடந்திருப்பது முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதுவரை இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்து சிகிக்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 10 பெட்டிகள் தரம் புரண்டு கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி குழு துரிதமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது,ஹவுராவில் இருந்து மும்பை சென்ற ரயில் ஜார்கண்ட் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். அவரது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஒன்றுமே புரியவில்லை? இதுதான் உங்கள் ஆட்சியா? ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்து மரணங்கள், படுகாயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எவ்வளவு காலம் இதை நாம் பொறுத்துக் கொள்ளப் போகிறோம். மத்திய அரசின் அலட்சியத்துக்கு ஒரு முடிவே இல்லையா? மீட்பு குழு துரிதமாக செயல்பட்டு காயம் அடைந்தவர்களின் மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee said that various deaths occur due to accidents in the room every week