தேர்தல் பற்றி மட்டுமே அக்கறை உள்ளது - பாஜக அரசை விமர்சித்த மம்தா.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வருகை தந்த மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ரெயில் பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மீது கூட அக்கறை இல்லை.

தேர்தலை பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு அக்கறை உள்ளது. தேர்தலில் எப்படி சூழ்ச்சி செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மட்டுமே பாஜக அரசு செயல்படுகிறது" என்று கடுமையாக விமர்சித்து பேசியள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha banargi speech about bjp government


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->