விசாகப்பட்டினம் : நடத்தையில் சந்தேகம் - கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்.! - Seithipunal
Seithipunal


நடத்தையில் சந்தேகம் - கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்-சிராவணி தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், சிராவணி விசாகப்பட்டினத்தில் ஜெகதம்பா பகுதியில் இருக்கும் செருப்பு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ஓவியர் கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானதால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே தனியாக வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே சிரவாணி வேறு சில ஆண்களுடன் பேசி வந்துள்ளார். இதையறிந்த கோபால் பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனால், அவர் அதனை நிறுத்தாமல் தனது ஆண் நண்பர்களிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கோபால் சிரவாணியை கொலை செய்ய முடிவு செய்தார். அதன் படி, கோபால் கடற்கரை சாலையில் உள்ள கோகுல் பார்க் பகுதிக்கு சிரவாணியை அழைத்துச் சென்று, அங்கு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

அதன் பின்னர், கோபால் தானாகவே காவல் நிலையத்திற்கு சென்று பெண்ணை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill girl friend in visagapattinam andira


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->