மகாராஷ்டிரா || மகனைத் திட்டிய ஆத்திரம் - சகோதரி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் கொக்கனி பாடா பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு லோகாண்டே. இவரது மகன் யாஷ். இந்த சிறுவனை சஞ்சு லோகாண்டேவின் சகோதரி துர்கா அனில் குண்டே என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, திட்டியுள்ளார். 

இதனால் துர்காவிற்கும், அண்ணன் சஞ்சுவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சஞ்சு, இரும்புக் கம்பியால் துர்காவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதைத் தடுக்க வந்த சஞ்சுவின் மகன் யாஷையும் அவர் இரும்புக் கம்பியால் தாக்கினார்.

இதில், இருவரும் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், துர்கா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

யாஷ் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து சஞ்சு லோகாண்டேவை கைது செய்தனர். மகனைத் திட்டியதற்காக சகோதரி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill woman in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->