போலீசாரை பார்த்ததும் போதைப்பொருளை விழுங்கிய வாலிபர் உயிரிழப்பு.!
man death for swallowd drugs in kerala
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் போலீசாரின் சோதனையின் போது மெத்திலீன் டையாக்ஸிமெத்தாம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை வாலிபர் ஒருவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க திடீரென்று விழுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாமரச்சேரி அருகே உள்ள மைகாவு பகுதியைச் சேர்ந்த ஷானித் என்ற வாலிபர் சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அங்கு ஷானித் போலீசாரைப் பார்த்ததும், ஒரு எம்.டி.எம்.ஏ பாக்கெட்டை விழுங்கியுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை தாமரச்சேரி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது வயிற்றில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளைக் கண்டறிந்து பெரிய அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
ஆனால், ஷானித் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார். அதன் பிறகு போலீசார் அவரது தந்தையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவரது தந்தையும் இந்த அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க மறுத்துவிட்டார்.
இதன் நிலையில் ஷானித் நேற்று காலை 11:00 மணியளவில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man death for swallowd drugs in kerala