சட்னியில் எட்டி பார்த்த தவளை - அதிர்ச்சியில் வடை பிரியர்.!
man found frog in chutny
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம் ஷோரனூர் ரெயில் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பயணி ஒருவர் இரண்டு வடை வாங்கியுள்ளார். அதனை சாப்பிட முயன்றபோது, வடைக்கு வழங்கிய சட்னியில் தவளை ஒன்று இறந்து கிடந்துள்ளது.
இதை பார்த்து அந்த பயணி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார்.
அந்த புகாரைத் தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தினர். மேலும், ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.