ம.பியில் பயங்கரம் || பாஜக எம்எல்ஏவின் மகன் செய்த கொடூர செயல் - ஒருவர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ம.பியில் பயங்கரம் || பாஜக எம்எல்ஏவின் மகன் செய்த கொடூர செயல் - ஒருவர் படுகாயம்.!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்ராவ்லி சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ராம் லல்லு வைஷ்யா. இவருடைய மகன் விவேகானந்த்.
இவர் நேற்று முன்தினம் மாலை காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு குறுகிய சாலையில் அதிக அளவில் கும்பல் நின்றிருந்த நிலையில் அவர்களுடன் விவேகானந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த விவேகானந்த் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் கைர்வார் என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். இதைபார்த்த விவேகானந்தர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைர்வாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக எம்எல்ஏவின் மகன் செய்த இந்த கொடூர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man injured in bjp MLA son shoot in madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->