ஆந்திராவில் பரிதாபம் - சண்டையைத் தடுக்க வந்த இளைஞர் சுட்டுக் கொலை.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் பரிதாபம் - சண்டையைத் தடுக்க வந்த இளைஞர் சுட்டுக் கொலை.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தியில் எஸ்டி காலனியை சேர்ந்தவர் செஞ்சைய்யா. கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது மது போதையில் வந்த அவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினார். 

இதில், வலி தாங்காமல் மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த சிந்தய்யா என்பவர் ஓடி வந்து செஞ்சைய்யாவை தடுத்து நிறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த செஞ்சைய்யா வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சண்டையைத் தடுக்க வந்த சிந்தய்யாவை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் சிந்தய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிந்தய்யாவின் உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் செஞ்சைய்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kill for stop husband wife fight in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->