மகளின் திருமணத்தை வித்தியாசமாக நடத்த 2000 ருபாய் நோட்டு போல் பத்திரிக்கை அடித்த தந்தை.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள, கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஒரு வியாபாரி. இவருடைய இளைய மகளுக்கு திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், இவர் தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து உறவினர்களுக்கு வழங்க முடிவு செய்தார். அதன்படி, அவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை போன்று அச்சடித்து அதன் முன்புறத்தில், மணமகள்- மணமகன் உள்ளிட்டோரின் பெயர்களை அச்சடித்தார். 

அந்த ரூபாய் நோட்டின் பின்புறத்தில் திருமணத்தின் விவரங்கள் இருந்தன. இதையடுத்து, வெங்கடேஷ் திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கிய போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வாங்கியது போன்ற உணர்வு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

ஏற்கனவே வெங்கடேஷ் தனது மூத்த மகள் திருமணத்திற்காக திருமண அழைப்பிதழை ஏடிஎம் கார்டு வடிவில் அச்சடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மகளின் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்து வழங்கிய வெங்கடேஷை அனைவரும் பாராட்டினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man present wedding invitation in 2000 thousand note


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->