சிறைக்கு செல்வதை தவிர்க்க பல்லியை விழுங்கிய நபர்.. உ.பி.யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
man swallowed a lizard to avoid going to jail in Uttarpradesh
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறைக்கு செல்வதை தவிர்க்க பல்லியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியை பகுதியில் மகேஷ் என்ற நபர் இளம் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து மகேஷ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் போலீசார் தன்னை கைது செய்ய வருவார்கள் என்று அச்சத்தில் இருந்த மகேஷ் சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக வீட்டில் இருந்த பள்ளியை விழுங்கியுள்ளார். இதனையடுத்து அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக பல்லியை விழுங்கி உயிருக்கே ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
man swallowed a lizard to avoid going to jail in Uttarpradesh