ஓடிடி தளங்களில் புகையிலை எதிர்ப்பு விளம்பரம் கட்டாயம் - மத்திய சுகாதார அமைச்சகம் - Seithipunal
Seithipunal


திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆகியவற்றில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறுவதைப் போன்று இனி ஓடிடி தளங்களும் புகையிலை எதிர்ப்பு வாசகங்களை வெளியிட வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதை மீறினால் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்த சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் திருத்த விதிகள் மூன்று மாதத்திற்குள் நடைமுறைக்கு வருகிறது.

ஓடிடி தளங்களின் படங்கள் மற்றும் நிகழ்ச்சியின் போது தொடக்கம் மற்றும் இடையிலும் 30 வினாடிகள் அளவுக்கு புகையிலை பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் படத்திலோ, இணைய தொடரிலோ புகையிலைப் பொருட்கள் தொடர்பான காட்சிகள் வரும்பொழுது கீழ்ப்பகுதியில் புகையிலை எச்சரிக்கை வாசகத்தை பதிவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandatory for anti tobacco advertising and slogans on Ott


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->