மண்டியில் வேட்பு மனுதாக்கல் செய்த நடிகை கங்கனா ரனாவத்.! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல், மண்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு கட்ட வாக்கு பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. 

இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்கு பதிவு ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடைபெற உள்ளது. 

இதில் மொத்தம் 57 தொகுதிகள் உள்ளது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள். 

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம், மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி வாரணாசியில் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandi constituency Kangana ranaut files nomination


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->