விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சல்: பதறிப்போன அதிகாரிகள்! நடந்தது என்ன?
Mangalore airport threat bomb
கர்நாடகா, மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த மின்னஞ்சலில், இங்குள்ள ஒரு விமானத்தில் மற்றும் விமான நிலையத்திற்கு உள்ளே வெடிபொருள்கள் உள்ளது.
அந்த வெடிபொருள்கள் சில மணி நேரத்தில் வெடித்து விடும். உங்கள் அனைவரையும் நான் கொன்று விடுவேன் எனவும் நாங்கள் பன்னிங் என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதனை அறிந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விமான நிலையத்திரு விரைந்து வந்து பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற செயலிகளை பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர்.
விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகு இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mangalore airport threat bomb