மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கே 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட மெய்டீஷ் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர் கொடி தூக்கி வருகின்றனர். இதில் கடந்த 3ம் தேதி மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர்.

அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கலவரமாக மாறி உள்ளது. இந்த வன்முறையில் வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாடு தளங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 

அதன் காரணமாக இராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் நடந்த கலவரத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வன்முறையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ‌.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur violence 61 peoples death cm announce relife fund


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->