மணிப்பூரில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு! பாஜக அரசுகளுக்கு கடும் நெருக்கடி?!
Manipur womens petition supreme court
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்து சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதற்கிடையே சி.பி.ஐ, இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டது. அதேபோல், உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் தானாக முன்வந்த உச்சநீதிமன்றம், நடவடிக்கை எடுப்பதுடன் பாரட்சமின்றி நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், தங்களது அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த சிபிஐ விசாரணை தொடர்பான மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது போல், பாதிக்கப்பட்ட பெண்கள் தாக்கல் செய்துள்ள மனு குறித்தும் விசாரனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ ஆறு வழக்குகளையும், 2 வழக்குகளை புலனாய்வு முகாமையும் விசாரிக்க உள்ளது.
இது குறித்த வைரல் வீடியோ பரப்பப்பட்டபோது, தனது வேதனையை தெரிவித்த உச்சநீதிமன்றம், இதற்கான உரிய நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Manipur womens petition supreme court