மதுபான முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!
Manish Sisodia judicial custody extended
கடந்த 2021-22 ஆம் ஆண்டில் நடந்த டெல்லி மதுபான கொள்கை பண மோசடி தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரிமான மணீஷ் சிசோடியா மீது அமலாக துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 9 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டது.
அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதற்கிடையே மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்த நிலையில் நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விசாரணைக்கு கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதனை தொடர்ந்து மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வருகின்ற 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Manish Sisodia judicial custody extended