தவெக ஆண்டு விழா - நுழைவுச் சீட்டு விநியோகம்.!
tvk first year annual day entry ticket provide
தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வருகிறது. இதுவரைக்கும் கட்சிக்கு 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் 2 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு தனிதனியாக அழைப்பிதழ், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது.
அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இதற்கிடையே தவெகவின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. நுழைவு சீட்டுகளை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 நுழைவுச் சீட்டு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் பொதுக்குழு எப்போது நடைபெறும் என்ற விவரத்தையும் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளார்.
English Summary
tvk first year annual day entry ticket provide