இனி முக கவசம் கட்டாயம் - அதிரடிக் காட்டும் சுகாதாரத்துறை.!
mask compulsary in kerala for nifa virus
கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து சிறுவனின் உடல்நிலை மோசமானதால் பெற்றோர் அவரை கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிறுவனின் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த சிறுவனுக்கு நிபா வைரஸ் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, "மலப்புரத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நோய் பாதித்த சிறுவன் வீட்டின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து யாரும் வெளியேறவோ?, அந்தப் பகுதிக்கு செல்லவோ? தடை விதிக்கப்பட்டுள்ளது.
வென்டிலேடர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் மாணவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோழிகோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதார ஆய்வாளர்கள் அவரை மாற்றினர். இதைத் தொடர்ந்து, அங்குள்ள தனி வார்டில் மாணவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்த சிறுவன் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அதனால், பொதுமக்கள் முக கவசம் அணிய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
mask compulsary in kerala for nifa virus