பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்! கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று 4637 நபருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவழியை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாளை பிரதம மந்திரி உடன் நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mask compulsory in karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->