தமிழகத்திற்கு வருகை புரிந்த மொரிசியஸ் ஜனாதிபதி.! - Seithipunal
Seithipunal


மொரீஷியஸ் நாட்டின் குடியரசுத்தலைவர் பிரித்விராஜ்சிங் ரூபன் மூன்று நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதில், முதல் நாள் (12.11.2022) அன்று சென்னை மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களையும், பார்வையிட்டார். 

மேலும், அங்குள்ள கடற்கரை கோவில் வளாகத்திற்குள் சென்று பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவிலின் சிற்பங்களையும், கோவிலின் இரு கருவறைகளில் உள்ள சிவன், விஷ்ணு சன்னதிகளையும் பார்வையிட்டு பின்னர் தன் குடும்பத்துடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளான நேற்று சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்றார். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை புரிந்த அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்ட அவர் கோவிலின் சிறப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கு அவருக்கு உலகப் புகழ் பெற்ற கோயில் இட்லி பிரசாதமாக வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார். அங்கு அவருக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்து பின்னர் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு பிரசாதங்களை வழங்கினார்.

குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுக்க காவல்துறை சார்பில் இருநூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவர் திருக்கோயிலில் நின்று தனது மனைவி மற்றும் கோவில் அர்ச்சகருடன் பல்வேறு இடங்களில் புகைபடம் எடுத்துக் கொண்டார். அதுமட்டுமல்லாமல், கோவிலில் சிறப்பு விருந்தினர்கள் வருகைப் புத்தகத்தில் தனது வருகையை பதிவு செய்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mauritius president visit Tamil Nadu tourist place


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->