திடீரென வானில் தோன்றிய ஏலியன் ரயில்.? பிரம்மித்து பீதியடைந்த ரசிகர்கள்.!
may alien train in uttar pradesh kanpur
உத்திரபிரதேசம் மாநிலத்தில் வானில் திடீரென ரயில் ஓடுவது போல ஒரு தோற்றம் தோன்றி மறைந்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. லக்னோ, கான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஒளி தென்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன என்று தெரியாத நிலையில், பலரும் அது ஏலியனின் நகரும் ரயில் என்று வதந்தியை கிளப்பியுள்ளனர். இது குறித்த ஒரு புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது ஒரு வேலை ஏலியனின் ரயிலாக இருக்குமோ என்று பலரிடமும் சந்தேகம் தோன்றியது. இந்த காட்சியானது ஹாரிபாட்டர் படத்தில் உள்ளதை போல பறக்கும் ரயில் போல இருக்கிறது.
இத்தகைய சூழலில், அது ஸ்டார்லிங் 51 செயற்கைக்கோள் ரயில் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் போது தோன்றும் வெளிச்சம் தான் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இது ஏலியன் என்று கதை கட்டிவிட்டு கொண்டிருக்கின்றனர்.
English Summary
may alien train in uttar pradesh kanpur