உபர், ரேபிடோ மூலம் போதை சாக்லேட் விற்பனை செய்த எம்.பி.ஏ மாணவன் கைது! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வருகிறார். இவர் சாக்லேட் மற்றும் ஹாஷ் ஆயிலை கலந்து சாக்லேட் தயாரித்து சமூக வலைதளம் மூலம் விற்பனை செய்து வந்தார். போலீசாருக்கு சாக்லேட்டில் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கவே அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தகுந்த ஆதாரத்துடன் அவரை கைது செய்துள்ளனர்.

(மாதிரி புகைப்படம்)

இது தொடர்பாக பேசிய காவல்துறையினர் "நான்கு கிலோ ரா சாக்லேட்டை 40 கிராம் ஹாஷ் ஆயிலுடன் கலந்து 60 சாக்லேட் கொண்ட பாக்கெட்டை ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை விற்பனை செய்துள்ளார். சமூக வலைத்தளமான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பரம் செய்து வாடிக்கையாளருடன் தொடர்பு கொண்டு உள்ளார். இவர் 'edibles are available' என்ற குறியீட்டு வார்த்தையுடன் போதைப் பொருட்களை விற்பனை செய்து உள்ளார். இவருக்கு வாழ்க்கையாளர்களாக 18 முதல் 22 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் இருந்துள்ளனர்.

இவர் தயாரிக்கும் சாக்லேட்டுகளை டெலிவரி செய்ய உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்களின் சேவை பயன்படுத்தி உள்ளார். அந்த சாக்லேட் பார்களை உட்கொண்டால் ஏழு மணி நேரம் வரை போதையில் இருப்பார்கள். இந்த சாக்லேட் மூலம் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் மொபைல் போனில் அவர்களது செயல்களை உன்னிப்பாக பார்க்க வேண்டும்" என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBA student arrested sold drug chocolate in Hyderabad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->