நாளுக்கு நாள் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு! விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய செயலி அறிமுகம்!
Measures to prevent 24 types of cyber crimes Central government decides to develop new apps to create awareness
சைபர் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக, சீனாவின் "ட்ரூ காலர்" செயலிக்கு மாற்றாக, புதிய மற்றும் நம்பகமான செயலி ஒன்றை உருவாக்கி, சைபர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய முயற்சியின் மூலம், மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கம் உள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைகளில், டிஜிட்டல் மோசடி, பணபரிமாற்ற களவாடல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள், போதைப் பொருட்கள் தொடர்பான தாகுதல்கள் உள்ளிட்ட 24 வகையான சைபர் குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தகைய குற்றங்களின் போது, உடனடியாக National Cyber Crime Reporting Portal-ல் அல்லது 1930 என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசு துவங்கிய Central Equipment Identity Register (CIER) போர்ட்டல் மூலம், தொலைந்து போன செல்போனின் ஐஇஎம்ஐ எண்ணை பதிவு செய்து, தவறாக அதைப் பயன்படுத்தும் எந்தவொரு முயற்சிகளையும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம். மேலும், Sanchar Saathi (sanchar saathi.gov.in) போர்ட்டல் மூலம், உங்கள் பெயரில் உள்ள அனைத்து சிம் கார்டுகளின் விபரங்களைப் பெற முடியும். தேவையற்ற சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்யலாம்.
சீனாவின் "ட்ரூ காலர்" செயலியில் உள்ள தனியுரிமை அபாயத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு "Calling Name Presentation (CNAP)" என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் போலி அழைப்புகளை தடுக்கும் நிலை உருவாகும்.
இவற்றுடன், இணையதளங்களில் வர்த்தக சம்பந்தமான போலி இணைப்புகள், வாட்ஸ் அப்பில் வரும் தவறான லிங்குகளை கிளிக் செய்வதிலிருந்து மக்களைக் கவனமாக இருக்கச் செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இத்தகைய புதிய முயற்சிகள், நாட்டின் சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
Measures to prevent 24 types of cyber crimes Central government decides to develop new apps to create awareness