வடமாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் அலை வீசும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.!
Meteorological Center information to next two days cold wave in india north states
சமீபத்தில் இந்தியாவில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பனியினால், வாகன ஓட்டிகள் சாலையில் முகப்பு விளக்கை ஏறிய விட்டபடி செல்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, டெல்லியில், ஜனவரி 5 முதல் 9 வரை கடுமையான குளிர் அலையைக் கண்டது. அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் இதுவரை 50 மணி நேரத்திற்கும் மேலாக அடர்த்தியான மூடுபனி பதிவாகியுள்ளது.
இது கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமானதாகும். இந்த நிலையில், அடுத்த ஐந்து நாட்களில் பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் இரண்டு டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான குளிர் அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Meteorological Center information to next two days cold wave in india north states