உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியா யார் பக்கம்.? மந்திரி ஜெய்சங்கரின் அதிரடி பதில்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களையும் வழங்கி உதவி வருகின்றது.

இந்நிலையில், டெல்லியில் தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், உக்ரைன்-ரஷ்யா போரில் இந்தியா யார் பக்கம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், உக்ரைன்-ரஷ்யா போரில் இந்திய அரசு இந்திய மக்களின் நலன் சார்ந்த பக்கத்தை எடுத்துள்ளது என்றும், பேச்சுவார்த்தை மூலம் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நிறைய நாடுகள் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன்-ரஷ்யா போர் வளர்ந்து வரும் நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் இந்தியாவும், பிரதமர் மோடியும் உலகின் வளர்ந்து வரும் நாடுகளின் குரலாக உருவெடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Jaishankar replied to the question on which side India is in the Ukraine Russia war


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->