அறுவை சிகிச்சையில் உயிரிழந்த இளைஞர் - விசாரணை குழு அமைக்க அமைச்சர் மா. சு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்களில் ஹேமசந்திரன், பி.எஸ்சி, ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணி செய்து வந்தார். 

ஹேமராஜன், சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார். இதில், ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன் படி அறுவை சிகிச்சை தொடங்கிய பதினைந்து நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனையில் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களை தொலைபேசி மூலமாக  தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று உறுதி அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister m subramaniyan order investigation committe for youth died case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->