பத்திரிகையாளர்கள் 'கர்மயோகிகள்' - பாராட்டிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Minister Rajnath Singh say about press and media
"கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பத்திரிகையாளர்கள் கர்மயோகிகள் போல் செயல்பட்டனர்" என்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் நடைபெற்ற நாட்டின் வாராந்திர பத்திரிகையான ‘பஞ்சன்யா’-வின் 75-வது ஆண்டு விழாஉள் இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது, "நம் நாட்டின் ஆசிரியர்களுக்கு இணையான மதிப்பு உடைவார்கள் பத்திரிகையாளர்கள். ஊடகத்துறை நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தூண்.
நேர்மை, உண்மையை பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் போட்டிக்காக தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லக்கூடாது.
செய்தி ஊடகங்கள் அரசுகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அதே சமயத்தில் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே விமர்சனம் செய்வது சரியில்லை.
நம் நாட்டில் உள்ள ஊடகங்களின் பணி முக்கியமானது. அதிலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் பத்திரிகையாளர்கள் கர்மயோகிகள்போல் செயல்பட்டனர்" என்று பேசினார்.
English Summary
Minister Rajnath Singh say about press and media