அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு: இன்று விசாரணை!
Minister Senthil Balaji Bail Petition Hearing Today
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.
இவரது தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த மாத 19ஆம் தேதி தள்ளுபடி செய்தது. ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த மாதம் 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Minister Senthil Balaji Bail Petition Hearing Today