கார் மீது ஏறி தேசிய கொடியுடன் பயணித்த அமைச்சர்! சர்ச்சையை கிளம்பிய வீடியோ!
Minister Vishwas Kailash Sarang who was traveling in a car carrying the national flag
மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சராங் தனது காரின் மீது அமர்ந்தபடி கையில் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றதை தொடர்ந்து வெற்றியை கொண்டாடும் விதமாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த மந்திரி விஸ்வாஸ் கைலாஷ் சராங் தனது காரின் மீது அமர்ந்தபடி கையில் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலக கோப்பை இறுதி போட்டி நேற்று முன்தினம் வெஸ்ட் இண்டீஸ் உள்ள பிரபல மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இந்திய அணியும் மோதியது. அதில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது.
டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றதை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர். டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.125 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்திய அணியின் வெற்றியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த மந்திரி விஷ்வாஸ் கைலாஷ் சாரங் தனது காரில் அமர்ந்தபடி கையில் தேசிய கொடியை பிடித்துகொண்டு ஊர்வலமாக சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Minister Vishwas Kailash Sarang who was traveling in a car carrying the national flag