சனி, ஞாயிறுகளில் வங்கிகளுக்கு விடுமுறையா? - நிதி அமைச்சகம் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சனி, ஞாயிறுகளில் வங்கிகளுக்கு விடுமுறையா? - நிதி அமைச்சகம் விளக்கம்.!

சமீபத்தில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் உடன் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த ஊழியர் சங்கத்தினர் அனைத்து சனிக்கிழமைகளும் வங்கி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இது குறித்து நிதி அமைச்சருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து,நிதி அமைச்சகம் ஊழியர்களின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இனி வங்கிகள் வாரத்தில் 5  நாட்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வார நாட்கள் செயல்பாட்டில் தினசரி கூடுதலாக 45 நிமிடங்கள் நீட்டிக்க படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் வங்கிகள் மாதத்தின் முதலாவது மற்றும் ஐந்தாவது வெள்ளிக்கிழமைகளில் முழு நேர அலுவல் நாளாக செயல்படுகின்றன

இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை நாளாக உள்ளது. ஆனால் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ministry finance explanation of bank holidays on saturday and sunday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->