காவி நிறமாக மாறிய டிடி சேனல் லோகோ - வலுக்கும் கண்டனங்கள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் இந்தி செய்தி சேனலான டிடி சேனலின் நீல நிற லோகோவானது சமீபத்தில், காவி நிறமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், "உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;

தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம் தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், இது குறித்து தெரிவிக்கையில், ”பிரசார் பாரதி தற்போது பிரசார பிரதியாக மாற்றப்பட்டிருக்கிறது. லோகோ மட்டுமல்ல டிடி சேனல் முழுவதுமே காவிமயமாகியிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin tweet about dd channel colour change


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->