நாடாளுமன்றத் தேர்தல் முக்கியம்... பதான் படத்தைப் பற்றி பேச வேண்டாம்... பிரதமர் மோடி அறிவுரை..!! - Seithipunal
Seithipunal


இந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் பதான் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பேஷாராம் ரன் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு காரணம் அந்த பாடலில் தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடையில் காணப்பட்டது தான்.

இதற்கு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பைச் சார்ந்தவர்கள் நடிகர் சாருக் கான் மற்றும் தீபிகா படுகோனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை சர்வதேச ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. மேலும் பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என பல இந்துத்துவ அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில் குஜராத் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் பதான் திரைப்படத்தை திரையிடக்கூடாது என கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குஜராத் அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் திரைப்படங்கள் குறித்து தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் மோடி பாஜக தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம்.

இதனால் மத்திய அமைச்சர்களின் கடின உழைப்பு வீணாக்கப்படுகிறது. சில ஊடகங்கள் பாஜகவினரின் சர்ச்சை கருத்துக்களை தலைப்பு செய்திகளில் போடுவதால் பாஜகவிற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே திரைப்படங்கள் குறித்து பாஜக தலைவர்கள் பொதுவெளியில் பேச வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இத்தகைய நடவடிக்கைக்கு ரசிகர்களும் திரையரங்குகளில் உரிமையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi advises BJP leaders not to talk about pathaan movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->