ராய்காட் பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு இரங்கல்.! - Seithipunal
Seithipunal


ராய்காட் பேருந்து விபத்து - உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு இரங்கல்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரைச் சேர்ந்த இசைக்குழு கலைஞர்கள் 42 பேர் புனே மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர்  தனியார் பேருந்தில் மும்பை நோக்கி புறப்பட்டனர்.

இந்தப் பேருந்து ராய்காட் மாவட்டம் கொப்போலி மலை பகுதியில் வந்து கொண்டு இருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். அதன் விவரம் பின்வருமாறு :-

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, "ராய்காட்டில் இசைக்கலைஞர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்தில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பேருந்து விபத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi and droubati murmu condoles to raykat bus accident died peoples


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->