இளையராஜா இசையுடன் காசி தமிழ் சங்கமத்தை இன்று துவக்கி வைக்கிறார் மோடி!
Modi inaugurates Kashi Tamil Sangamam today with Ilayaraja music
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை காசியில் பல்வேறு துறை அமைச்சர்களாலும் அதிகாரிகளாலும் செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 12 பிரிவுகளில் 2500 பேர் காசிக்கு 8 நாள் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இன்று நடைபெறும் துவக்க விழா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியுடன் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் "தமிழகத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் சிறிது காலம் காசியில் வசித்துள்ளார். அவர் இங்கு வசித்த போது தான் ஆன்மீகத்தின் மீதும் தேசத்தின் மீதும் அவருக்கு ஈர்ப்பு உண்டானது. காசி அனுமன் கட் எனும் இடத்தில் அவர் வசித்த வீடு இன்றைக்கும் கற்றல் மற்றும் புனித தளமாக வழிபட்டு வருகின்றனர்" என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்
English Summary
Modi inaugurates Kashi Tamil Sangamam today with Ilayaraja music