பள்ளத்தாக்கில் விலை உயர்ந்த போனை தூக்கி போட்ட குரங்கு! தீயணைப்பு அதிகாரி தேடுதல்!  - Seithipunal
Seithipunal


கேரளா, வயநாடு பகுதியில் உள்ள பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்த போது அங்கிருந்த பள்ளத்தாக்கு பகுதியில் நண்பர்களுடன் அவர் செல்போனில் செல்பி எடுத்தார். 

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குரங்கு ஜாசிமின் விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளூர் மக்களிடம் உதவி கேட்டார். 

ஆனால் பள்ளத்தாக்கு மிக சரிவாக இருந்ததால் யாரும் இறங்க முன் வராததால் உடனடியாக அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

ஆனால் அவர்கள் மனித உயிர்களை காப்பாற்ற மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணியில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். 

அதற்கு செல்ஃபோனின் விலை ரூ. 65 ஆயிரம் எனவும் அதில் பல்வேறு ஆவணங்கள் இருப்பதாகவும் ஜாசின் தெரிவித்து மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார். 

இதனை அடுத்து தீயணைப்பு அதிகாரி நேரடியாக வந்து பிரத்தியேக மலையேறும் கருவியை பயன்படுத்தி சுமார் 60 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் இறங்கி அதிகாரி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

monkey threw expensive phone valley


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->