குஜராத்தில் கொடூர விபத்து | தொங்கு பாலம் இடிந்து விழுந்து 32 பேர் பலி, பலர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் இன்று மாலை இடிந்து விழுந்ததால், அதில் நின்றிருந்த பலர் ஆற்றில் விழுந்தனர்.

அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட இந்த பாலத்தில், இன்று மக்கள் அதிகம் நின்றதால் பாரம் தாங்கமால் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பிற அதிகாரிகளிடம் பேசியுள்ளார். அப்போது மீட்புப் பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதுவரை இந்த விபத்தில் 32 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்நிலையில், கேபிள் பாலம் இடிந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

morbi cable bridge collapsed in the Machchhu river in Gujarat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->