தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை! கனமழை காரணமாக 2 குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள், மலை பிரதேசத்துக்கு அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய நகரங்களில் ஓர் இடங்களில் லேசானது முதல் மிக கனமழை பெய்து வரும் காரணத்தினால் மாநிலங்களில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தினால் பல்வேறு பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அதிகபட்சமாக ஹாவேரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ஹாவேரி மாவட்டம் சாவனூர் அடுத்த மாதப்பூர் கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

சன்னம்மா தோட்டபசப்பா மற்றும் அவரது குழந்தைகள் அமுல்யா முத்தப்பா ஹரகுனி, அனுஸ்ரீ முத்தப்பா ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்து போலீசார் மட்டும் மீட்டு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் உடலை மீட்டு  பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and two children killed as house collapses due to heavy rains in Karnataka


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->