வறுமையால் பெற்ற குழந்தையை கொலை செய்த தாய், விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்..!
Mother Killed His Child In Kerala
பிறந்து ஒரு மணிநேரமே ஆன குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், தொடுப்புழா அடுத்துள்ள உடுமண்ணூர் முக்குளி கிராமத்தை சேர்ந்தவர் சதீசன். இவரது மனைவி சுஜிதா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அவர் மூன்றாம் முறையாக கர்பமடைந்தார். இதனை கணவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். அவரது வயிறு பெரியதாக இருப்பதை பற்றி கேட்ட போதெல்லாம் உடல் பருமனாகி விட்டது தெரிவித்துள்ளனர்.
திடீரென அவர் மயங்கி விழுந்ததை அடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பிரசவமானது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு குழந்தை பிறந்ததாகவும், குடும்ப வறுமையின் காரணமாக அந்த குழந்தையின் தண்ணீர் வாளியில் அழுத்தி கொலை செய்ததாகதெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் தண்ணீர் வாளியில் இருந்த குழந்தையிம் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சுஜிதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமை காரணமாக பெற்ற குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mother Killed His Child In Kerala