கால்நடை மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம்.! ஏரியில் மூழ்கி தாய்-மகன் உட்பட 3 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் ஏரியில் மூழ்கி தாய்-மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள வலகெரேஹள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். இவருடைய மனைவி சைலஜா (30). இவர்களது மகன் தேஜஸ் (11). இந்நிலையில் நேற்று காலை கால்நடை மேய்ப்பதற்காக சைலஜா, தனது மகனுடன் பகுதியில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த யோதன்(15) என்ற சிறுவனும், தேஜஸ்சும் சேர்ந்து ஏரியில் குளித்துள்ளனர். இதையடுத்து இருவரும் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளனர். இதைப் பார்த்த சைலஜா, இருவரையும் காப்பாற்ற முயன்ற போது அவரும் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother son including 3 drowned in lake in Karnataka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->