சஞ்சய் சிங் எம்.பியாக தொடர்வாரா? - அதிர்ச்சி கொடுத்த மாநிலங்களவை தலைவர்.! - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்து வந்த சஞ்சய் சிங்கின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஆம் ஆத்மி கட்சி தரப்பில் மீண்டும் சஞ்சய் சிங் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இடைக்கால ஜாமின் வழங்குமாறு டெல்லி நீதிமன்றத்தில் சஞ்சய் முறையீடு செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் சஞ்சய் சிங்குக்கு நீதிமன்ற காவலில் பிப்ரவரி 5ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

இந்த நிலையில் சஞ்சய் சிங் மீதான குற்றச்சாட்டு, நாடாளுமன்ற உரிமை குழுவில் விசாரணைக்கு உள்ளதால் பதவி ஏற்புக்கு அனுமதிக்க முடியாது என்று மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தலைவரின் இந்த முடிவு தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp sanjai singh not swering in mp rajyasaba leader decide


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->