ஃபேமஸ் ஆகதான் இப்படி செய்தேன்..! குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகர் ரெட்டி, ஹைதராபாத் சித்திபேட்டையில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

அப்போது அவரிடம் கைக்குழுக்குவது போல வந்த ஒரு நபர் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த பிரபாகர் ரெட்டியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டது.

கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் குற்றவாளியை பிடித்து சரமாரியாக தாக்கி பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

ஆதரவாளர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த குற்றவாளியை போலீசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்ற பின் கைது செய்து விசாரணை நடத்தினார். 

விசாரணையில், கத்தியால் குத்தியது ராஜு (வயது 40) என்பதும் மக்களின் கவனத்தை பெறுவதற்காகவும் பேசு பொருளாக தான் மாறுவதற்காகவும் எம்.பி ஐ கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு கத்தியை வாங்கி வைத்திருந்ததாகவும் சூரப்பள்ளி கிராமத்தில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ராஜூவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஐபிசி 307 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் குற்றவாளி பயன்படுத்திய கத்தி மற்றும் அவரது செல்ஃபோன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொலை முயற்சி தொடர்பாக வேறு நோக்கங்கள் ஏதாவது உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP stabbed person sensational confession


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->