3 குழந்தைகள் பெற்ற எம்.பி & எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அஜித் பவார்.! - Seithipunal
Seithipunal


3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் எம்பி மற்றும் எம்எல்ஏ கிளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் துணை முதலமைச்சர் ஆன அஜித் பவர் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர் இந்தியாவில் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாகவும் இதற்கு நாமே பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் எம்பி மற்றும் எம்.எல்.ஏ-க்களை மத்திய அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் தம்பதிகளுக்கு முதலில் ஒரு குழந்தை பிறந்து, இரண்டாவது இரட்டை குழந்தைகள் பிறந்தாலோ அல்லது ஒரே முறையில் மூன்று குழந்தைகள் பிறந்தாலோ அது அவர்களின் தவறாக கருதக்கூடாது என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MPs & MLAs have 3 children should be disqualified Ajit Pawar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->