'பாரத்'-யனாக இருப்பது எனது பாக்கியம்! - எம்.எஸ் தோனி.! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக பரவலாக பேசப்பட்ட வந்த நிலையில் நேற்று குடியரசு தின தலைவர் மாளிகை ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்களுக்கான விருந்து அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பிய சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் அடங்குவதற்குள் இந்தோனேஷியா செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் ஆதரவு தெரிவித்து வரும் அதே சூழலில் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார். 

இந்த சூழலில் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தில் "இந்திய கொடியின் பின்னணியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் "I blessed to be a Bharatiya" எனக் குறிப்பிட்ட முகப்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நான் பாரதியனாக இருப்பது பாக்கியம் என பொருள்படும்படி புகைப்படத்தை வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MSDhoni changed insta profile picture to blessed as Bharatiya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->