மும்பையில் பிரிட்டிஷ் காலத்து கர்னாக் பாலம் அகற்றம்.!
Mumbai Carnac Bridge demolished
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புறநகர் பாதையில் ஆங்கிலேயர் காலத்தில், 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினால் ஆன கர்னக் மேம்பாலம் இருந்தது. இந்த பாலம் 1866-67 இல் கட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டே பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டு, இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த மும்பை ஐஐடி நிபுணர் குழு, கடந்த 2018ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பற்றது என்று சான்றளித்தது.
இதைத்தொடர்ந்து, பாலத்தை அகற்ற ரயில்வே திட்டம் தீட்டி, நவம்பர் 19ஆம் தேதி இரவு 11 மணிக்கு பாலம் இடிக்கும் பணி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பணி நிறைவடைந்தது.
இதில் பாலத்தை அகற்றுவதற்கு ரெயில்வேதுறை 500 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும், பாலம் 44 துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 19 மாதங்களுக்குள் கார்னாக் பாலத்திற்குப் பதிலாக ஒரு பாலம் அமைக்கப்படும் என்றும், 70 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட புதிய பாலம் ரூ.49 கோடி செலவில் கட்டப்பட உள்ளது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
English Summary
Mumbai Carnac Bridge demolished