மொத்தம் 108 முறை! ஆபாச புகைப்படம் காட்டி மிரட்டிய பெண் கைது!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் தானேவில், ஓய்வு பெற்ற கூட்டணி வங்கி CEO-விடம் நிர்வாண படத்தை வெளியிடுவேன் என மிரட்டி 4 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ஓய்வு பெற்ற கூட்டணி வங்கி CEO-வாக இருந்து ஓய்வு பெற்ற 66 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு இவர் பணிபுரிந்த போது, பெண் ஒருவர் வங்கி கடன் தொடர்பாக வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, வங்கி கடன் தொடர்பாக சில ஆவணங்களை பெறுவதற்காக CEO அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது CEO வுடன் அந்த பெண் வலுக்கட்டாயமாக உடல் தொடர்பாக தொடர்பு வைத்துள்ளார்.

இதன் பின்னர், அந்த பெண்ணிற்கு ரூபாய் 3 லட்சம் 7300 ரூபாய் தவணையில் கடன் வழங்கப்பட்டது. இதனை அடுத்து, அந்தப் பெண்மணி ஒரு மாதத்திற்குப் பிறகு வாட்ஸ்அப்பில் தனக்கு அனுப்பிய நிர்வாண படத்தை CEO-வின் குடும்பத்தினரிடம் அனுப்பி விடுவதாக மிரட்டி உள்ளார். 

மேற்கொண்டு, அனுப்பாமல் இருக்க ரூபாய் 8 கோடி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மிரட்டலுக்கு பயந்து CEO உடனடியாக ரூபாய் 5 லட்சம் அந்த பெண்ணிற்கு வழங்கியுள்ளார். 

மேலும், கடந்த 2017- ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் வரை அவர் தனது வீட்டை விற்று, தனது சேமிப்பு பணம் மற்றும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி 4.39 கோடி ரூபாயை 108 தவணையாக கொடுத்துள்ளார்.

இதன் பின்னரும் அந்தப் பெண் CEO விடம் இறுதியாக 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்தனர். 

மேலும், காவல்துறையினர், ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக கூறி அந்த பெண்மணியை வர சொல்லுங்கள் என CEO- விடம் தெரிவிக்க, அவரும் அந்த பெண்ணிடம் ஒரு 1 லட்சம் ரூபாய் தருவதாக கூறி வர வைத்துள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், இது போன்ற மிரட்டல்கள் ஏற்படும்போது உடடியாக தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai forgery Lady arrested june 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->