மெட்ரோ ரெயிலில் சைக்கிள்: வைரலாகும் வாலிபரின் பதிவு! - Seithipunal
Seithipunal


மும்பை நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுவதால் பயணிகள் பலரும் பொது போக்குவரத்திற்காக மெட்ரோ ரயில் பயன்படுத்தி வருகின்றனர். 

குறிப்பிட்ட தூரம் வரை மெட்ரோவில் சென்றாலும் அதன் பிறகு செல்ல வேண்டிய இடத்திற்கு ஆட்டோ ரிக்ஷாக்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வாலிபர் ஒருவர் மும்பை மெட்ரோ ரயிலுக்குள் சைக்கிள் கொண்டு வந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. 

அந்த வீடியோவுடன் அவரது பதிவில், 'பரபரப்பான மும்பை தெருக்களில் சைக்கிள் ஓட்டுவது பின்னர் உங்கள் பைக் உடன் தடையின்றி மெட்ரோவுக்கு மாறுவது ஒரு உற்சாகமான சாகசம். 

மும்பை நகரின் பல்வேறு பகுதிகளை ஆராயவும் கலாச்சாரத்தில் மூழ்கவும் உங்களை அனுமதிக்கிறது' என குறிப்பிட்டுள்ளார். 

பயணிகள் மும்பை மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்களது சைக்கிள்களை எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் கொண்டுவர அனுமதி உள்ளது. 

ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு நேரத்தில் ஒரு சைக்கிளுக்கு இடமளிக்கும் வகையில் பிரத்தியேக பார்க்கிங் ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இன்ஸ்டாகிராமில் வாலிபரின் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பயனர்கள் சிலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai metro Rail man travelling with bicycle


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->