"ஆதார் எண்" இணைக்காவிட்டால்..! வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கமா..? மத்திய அமைச்சரின் விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை என்னுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

அவ்வாறு நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பெரும்பாலானோர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் தவிர்த்து உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை என்னுடன் ஆதார் எண்ணை இணைக்காவிடில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படாது என மாநிலங்களவையில் தெரிவித்ததாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசம் 2024 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Name not be removed from voter list if Aadhar not linked


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->