தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க கோரிய வழக்கு; உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!
National Crime Archives info boys sucide in india
தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க கோரிய வழக்கு; உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!
கடந்த 2021-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, ஓராண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை 1,64,033 ஆகும். இதில் திருமணமான ஆண்களின் எண்ணிக்கை 81,063; திருமணமான பெண்களின் எண்ணிக்கை 28,680.
அதாவது திருமணமானவர்களில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த தரவுகளின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கில், குடும்ப வன்முறைகளில் இருந்து கணவன்மார்களை காப்பாற்ற, ‘தேசிய ஆடவர் ஆணையம்’ அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறும், குடும்ப வன்முறைகளால் துன்புறும் ஆண்களின் புகார்களை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்கொலை செய்துகொள்ளும் ஆண்கள் தொடர்பாக விசாரிக்க மனித உரிமைகள் ஆணையத்துக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுநல வழக்கினை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் திபான்கர் தத்தா உள்ளிட்டோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வரும் திங்களன்று விசாரணை செய்ய உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தான் இதற்கு ஒரு முடிவு தெரிய வரும்.
English Summary
National Crime Archives info boys sucide in india