பெலகாவி விவகாரம் - கர்நாடக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.!
national human rights commission notice to karnataga government for belagavi issue
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
இதையடுத்து இளைஞரின் வீட்டிற்கு சென்ற பெண் வீட்டார், அந்த வீட்டை அடித்து சேதப்படுத்தியதோடு, இளைஞரின் தாயாரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று, மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில அரசு விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டிஸில், இந்த சம்பவம் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என்றும், சமூகத்தில் எளியவர்களையும், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரம், விசாரணையின் தற்போதைய நிலை, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட நிவாரணம், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கை உள்ளிட்டவைக் குறித்து கர்நாடக மாநில அரசு 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
national human rights commission notice to karnataga government for belagavi issue